சேலம் அருகே இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அரிசிபாளையத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் திருடி சென்றுள்ளார். தற்போது இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.