திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே அரசுப் பள்ளி மாணவர்களை செங்கல் சுமக்க வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கொசவன்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், விடுமுறை தினத்தன்று மாணவர்களை பள்ளிக்கு அழைத்த பள்ளி நிர்வாகத்தினர் கட்டுமான பணிக்காக செங்கற்களை சுமக்க வைத்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலான நிலையில், சம்பவம் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.