திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பகுதியில் தலையில் வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
புதுச்சேரியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்ட வந்த நிலையில், அவர் மீது 5க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்துள்ளன. திருவண்ணாமலை சென்ற ஐயப்பன், நீலந்தாங்கல் பெரிய ஏரி அருகே சீட்டு விளையாடியுள்ளார்.
அப்போது வட்டிக்கு பணம் கொடுத்ததை திரும்ப கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், உடன் வந்தவர்கள் ஐயப்பனை தலை, கழுத்து, மார்பு பகுதியில் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.