கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி மனு அளிக்க சென்ற பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இது அவ்வழியாக செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கு இடையூறாக இருப்பதாக புகார் எழுந்தது.
இதுகுறித்த அறிந்த பாஜகவினர் 100க்கும் மேற்பட்டோர், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கோட்டாட்சியரிடம் மனு அளிக்க சென்றனர்.
அப்போது அவர்களை பேருந்து நிறுத்தத்திலேயே தடுத்து நிறுத்திய காவல்துறையினர், மனு அளிக்க விடாமல் அனைவரும் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.