ஃபிஜி தீவில் இந்தியா மற்றும் ஜப்பான் ராணுவ வீரர்களுக்கான கூட்டு பயிற்சி நிறைவடைந்தது.
தர்ம பாதுகாவலன் என்ற பெயரில், கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த இந்த கூட்டு பயிற்சியில், இருநாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து பல்வேறு பயிற்சியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக பிராந்திய அச்சுறுத்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்வது, பயங்கரவாதத்தை ஒழிப்பது, வியூக ரீதியிலான பாதுகாப்பு மேலாண்மை ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு இந்த பயிற்சி நடைபெற்றது.