ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியின் பாஸ்போர்ட்டை உடனடியாக ரத்து செய்யுமாறு குடியுரிமை ஆணையத்துக்கு வனுவாட்டு பிரதமர் ஜோதம் நபாட் அறிவுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் மேட்ச் பிக்சிங் முறைகேட்டில் சிக்கிய லலித் மோடி, ஆஸ்திரேலியாவுக்கு அருகே அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டுவில் குடியுரிமை பெற்று தஞ்சம் அடைத்தார்.
கடந்த வாரம் பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகிய லலித் மோடி, தனது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க விண்ணப்பித்திருந்தார். இந்த சூழலில், லலித் மோடியின் பாஸ்போர்ட்டை உடனடியாக ரத்து செய்யுமாறு வனுவாட்டு பிரதமர் ஜோதம் உத்தரவிட்டுள்ளார்.