தனக்கு வந்த 100 கோடி ரூபாய் பட்ஜெட் பட வாய்ப்பை மறுத்ததற்காக கண்ணாடியில் பார்த்து அறைந்து கொண்டதாக நடிகர் கோவிந்தா தெரிவித்தார்.
தனது யூடியூப் சேனலில் சக்தி மான் நடிகர் முகேஷ் கன்னாவிடம் பேசிய கோவிந்தா, 100 ரூபாய் கோடி படத்தை நிராகரித்ததற்காக வருத்தப்படுவதாக கூறினார்.
இதற்காக தன்னை கண்ணாடியில் பார்த்து அறைந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏற்கெனவே அவதார் பட வாய்ப்பை நழுவ விட்டதாக கூறி, சமூக வலைதளங்களில் நடிகர் கோவிந்தா கேலிக்குள்ளானது நினைவுகூரத்தக்கது.