அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என பாமக நிழல் நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி நிலை அறிக்கையை தயாரிப்பதில் அரசுக்கு வழிகாட்ட வேண்டும் என்று 2003-2004-ம் ஆண்டு முதல் பாமக சார்பில் பொது நிழல் நிதி அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் 23-வது பாமக நிழல் நிதி அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.
அதில், கல்வி, மருத்துவத்துக்கு 6 சதவீத நிதியும், வேளாண்துறைக்கு 65 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மே 1-ம் தேதி முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும், தொகுதிக்கு ஒரு அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும், டிஎன்பிஎஸ்சிக்கு நிலையான தேர்வு அட்டவணை உருவாக்கப்படும் என்றும் நிழல் நிதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் மின்சார கட்டணம் குறைக்கப்படும் என்றும் பாமகவின் நிழல் நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.