எடப்பாடி பழனிசாமி வசம் இரட்டை இலை உள்ளதால் அதிமுக பலவீனமாகிக் கொண்டிருக்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் தெலுங்கன்குடிகாட்டில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை சேர்ந்த வைத்திலிங்கத்தை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுக-விற்கு இபிஎஸ் மூடுவிழா நடத்தி விடுவார் என தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள தொண்டர்களும் நிர்வாகிகளும் விழித்துக் கொள்ள வேண்டும் என்றும், தேர்தலுக்குப் பிறகு அதிமுக-வை மீட்டெடுக்கின்ற பொறுப்பு தங்களிடம் வரும் என்றும் தினகரன் கூறினார்.