“சம கல்வி எங்கள் உரிமை” கையெழுத்து இயக்கம் 10 லட்சம் கையெழுத்துகளை கடந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழக பாஜக சார்பில் தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கத்திற்கு நேரடியாகவும், இணையதளம் வாயிலாகவும் மக்கள் பேராதரவை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
ஒரு கோடி என்ற இலக்கை குறிவைத்து தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம், 5-வது நாளில் 10 லட்சம் என்ற பெரிய இலக்கை கடந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏழை, எளிய மக்களை வஞ்சித்து வந்த திமுக-வின் இரட்டை வேடம் முழுவதுமாக கலைந்திருப்பதை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் கையெழுத்தை பதிவு செய்வதன் மூலம் உணர முடிவதாக தெரிவித்துள்ள அவர், இதனை மடைமாற்றம் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் ஆயிரம் முயற்சிகள் மேற்கொண்டாலும், பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்தே தீரும் எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.