புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது. 2025-26ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளார்.
மேலும் புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்ய 13,600 கோடி ரூபாய் ஒதுக்கி மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் துறைவாரியாக நிதியை இறுதி செய்வதற்காக முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தலைமை செயலாளர் சரத் சவுகான் உள்ளிட்ட அனைத்து துறை செயலாளர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.