கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து பெற்றனர்.
போச்சம்பள்ளி பேருந்து நிலையம் எதிரே பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் கவியரசு தலைமையில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
பாஜகவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு, மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பேசினர்.
அப்போது பேசிய பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் கவியரசு, தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மூன்றாவதாக ஒரு மொழியையும் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம் எனவும் தெரிவித்தார்.