மொரிஷியஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மொரிஷியஸ் நாட்டின் 57-வது தேசிய தின கொண்டாட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் தலைமை விருந்தினராக கலந்துகொள்வதற்காக, 2 நாள் பயணமாக பிரதமர் மோடி தனி விமானம் மூலமாக மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார்.
மொரிஷியஸ் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் நவின் ரம்கூலம் ஆரத்தழுவி வரவேற்றார். மேலும், போர்ட் லூயிஸ் விமான நிலையம் வந்திருந்த தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியினரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், கடற்படையின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.