கோவை மாவட்டம், பூச்சியூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது.
பூச்சியூர் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையை வலை வைத்து பிடித்தனர்.
இந்த சிறுத்தைதான், சில நாட்களுக்கு முன்பு ஆடுகளை கடித்தும், குடியிருப்புகளில் உலா வந்தும் மக்களை அச்சுறுத்திய சிறுத்தையா என்று வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.