கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த லேசான சாரல் மழையால், நகரின் ஒருசில பகுதிகளில் அதி பனி மூட்டத்துடன் காணப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இந்நிலையில், நகரின் மையப்பகுதிகளான பேருந்து நிலையம், ஏரிச்சாலை, நாயுடுபுறம் மற்றும் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர் மற்றும் கீழ்மலை கிராமங்களான பெருமாள் மலை, அடுக்கம், தாண்டுக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.
இதனால் நகரின் ஒருசில பகுதிகள் அதிக பனிமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
மழைபொழிவு தொடங்கியுள்ளதால் பட்டாணி, கேரட், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் உள்ளிட்டவைகளை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.