பீகாரில் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ஆரா நகரில் உள்ள மார்க்கெட் பகுதியில் பிரபல நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
தொடர்ந்து அவர்களை விரட்டி சென்ற போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயமடைந்தனர். அவர்களிடமிருந்து 2 துப்பாக்கி மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய மேலும் 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.