கேரளாவில் கோயில் திருவிழாவின்போது யானைக்கு மதம் பிடித்ததால் கற்களை வீசியெறிந்து பாகன்கள் யானையை அடக்கினர்.
திருச்சூர் மாவட்டம் பெரிஞ்ஞனம் பகுதியில் உள்ள கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள வந்த நாராயண ஸ்ரீ ஐயப்பன் என்ற யானைக்கு திடீரென மதம் பிடித்தது.
அப்போது அருகிலிருந்த பாகன்கள் யானை மீது கற்களை வீசியெறிந்து அதை அடக்க முயன்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.