கன்னியாகுமரியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டது.
கன்னியாகுமரியின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதன்காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலம் உள்ளிட்டவற்றை சுற்றுலாப்பயணிகள் காணும் வகையில் இயக்கப்பட்டு வந்த படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாப்படகின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.