கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் சோப்பனூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
அப்போது கட்சி துண்டுடன் நடனமாடிய மாணவர்களை தடுக்க தவறியதாக பள்ளியின் தலைமையாசிரியர் விஜயகுமார், பட்டதாரி ஆசிரியர் சுப்பிரமணி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு நெருங்கும் வேளையில் நடைபெற்ற இந்த இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.