திருச்செந்தூரில் மதுபோதையில் தகராறு செய்த கணவன் தலையில் கல்லை போட்டு மனைவி கொலை செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சேர்மத்துரை.
இவருக்கு மீனாதேவி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ள நிலையில் சேர்மத்துரை தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மீனாதேவி ஹாலோபிளாக்ஸ் கல்லை சேர்மத்துரை தலையில் தூக்கிபோட்டுள்ளார். இதில் தலை நசுங்கி சேர்மத்துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மீனா தேவியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.