மதுபான கொள்கை ஊழலில் டெல்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழ்நாடும் சிக்கபோகிறதா என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அதேபோல், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், அவரது மகன் சைதன்யா பாகெல் ஆகியோரது வீடுகள் உட்பட 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்திலும் டாஸ்மாக் தலைமை அலுவலகம், பல்வேறு தனியார் மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி டெல்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து அடுத்தது தமிழ்நாடா என கேள்வி எழுப்பி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.