நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தந்தை இறந்த சோகத்திலும் மாணவி பிளஸ் 2 தேர்வெழுதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடலிவிளை கிராமத்தை சேர்ந்த அய்யாதுரை- பானுமதி தம்பதியரின் மகள் மதுமிதா. இவர் அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அய்யாதுரை, எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.
இருப்பினும் தந்தை உயிரிழந்த சோகத்திலும் மதுமிதா பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத சென்றார். முன்னதாக அவர் தந்தையை வணங்கிவிட்டு தேர்வெழுத சென்றது அனைவரையும் கண்கலங்க செய்தது.