கன்னியாகுமரியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கோயிலின் 50-ம் ஆண்டு பொன்விழாவை ஒட்டி, புனர் பிரதிஷ்டையும், மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
பேரை பாரக்காவிளை பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலின் 50ம் ஆண்டு பொன்விழா கடந்த 8-ம் தேதி தொடங்கியது.
இதனைதொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் சபரிமலை மேல்சாந்தி பிரம்ம ஸ்ரீ தெக்கெடத்து மன நாராயணன் விஷ்ணு நம்பூதிரி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை புனர் பிரதிஷ்டை செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.