கன்னியாகுமரியில் மகளிருக்கான இலவச பேருந்தில் ஆண்கள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த பெண்ணை ஒருமையில் பேசிய நபரின் வீடியோ வெளியாகியுள்ளது.
தக்கலையில் இருந்து அருமனை நோக்கி சென்றுகொண்டிருந்த அப்பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில், கடைசியில் உள்ள ஆண்கள் இருக்கையில் ஒரு பெண் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.
அப்போது அருகில் இருந்த நபருடன் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், அந்த நபர் பெண்ணை ஒருமையில் பேசி வம்பிழுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.