மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்கள் இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
செம்பனார்கோவில் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை, வல்லம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான அபிமன்யூ மற்றும் முத்தரசன் ஆகியோர், பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் சிறுமியிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சகோதரர்களான அபிமன்யூ மற்றும் முத்தரசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.