காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் பகுதியில் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
மணிமங்கலம் பகுதியை சேர்ந்த பாலகுமாரன், வித்தியா என்ற தம்பதி தங்களது இரண்டரை வயதில் மகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் 4-வது மாடிக்கு வித்தியா தனது குழந்தையுடன் சென்றுள்ளார்.
அப்போது மாடிப்படியின் கைப்பிடி கம்பி வழியாக குழந்தை தவறி விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.