திமுக எம்.பி கனிமொழி மக்கள் மன்றத்தில் பொய்யான பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்த தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக எம்.பி.க்கள் நேர்மையற்றவர்கள், ஜனநாயக விரோதிகள், நாகரிகமற்றவர்கள் என விமர்சித்துள்ளார்.
திமுக எம்.பி கனிமொழி மக்கள் மன்றத்தில் பொய்யான பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள அண்ணாமலை, பிரதமர் பற்றிய துணை முதல்வரின் அருவருக்கத்தக்க கருத்துக்களை மக்களுக்கு எதிரான கருத்தாக கருதலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ திட்டம் செயல்படுத்துவதை நிறுத்திய சூப்பர் முதல்வர் யார் என்பதை தெரியப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர்,
மக்களை ஏமாற்ற நினைக்க வேண்டாமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.