வரும் 2036-ஆம் ஆண்டில் இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக அகமதாபாத்தில் உலக தரத்தில் 10 விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தார்.
2036-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா தொகுத்து வழங்க முடிவு செய்திருக்கிறது.
அந்த வகையில், அகமதாபாத்தில் 10 விளையாட்டு அரங்குகளைத் தயார் செய்து போட்டிகளை நடத்தினால், ஒலிம்பிக் வரலாற்றில் முத்திரை பதிக்கலாம் என மத்திய அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.