தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் சுரங்கத்தில் சிக்கிய 7 பேரின் சடலங்களை மீட்கும் பணியில் ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22ஆம் தேதி ஸ்ரீசைலத்தில் சுரங்கப் பாதையில் கடைசி பகுதி இடிந்து விழுந்து 8 பேர் சிக்கினர். 2 வாரத்துக்குப் பின் ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 7 பேரின் சடலங்களை மீட்கும் பணியில் ரோபோவுடன் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மீட்புக் குழுவினர் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.