ஹோலி விடுமுறையை ஒட்டி திருப்பூர் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது.
திருப்பூரில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஹோலி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஏராளமானோர் ரயில் நிலையத்திற்கு வருகை தந்தனர்.
இதனால் திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் பன்மடங்கு அதிகரித்த நிலையில், வடமாநில தொழிலாளர்கள் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறினர்.