பாலியல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட 23 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சமீபகாலமாக தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை அளித்த சம்பவங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அப்போது பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதற்கட்டமாக பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்ட 23 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவர்களின் சான்றிதழ்களை ரத்து செய்ய அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது….