ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனியாக சென்ற நபரை உள்நோயாளியாக அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமநாதபுரம் சலவை தொழிலாளர் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் , உள்நோயாளியாக சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
பின்னர் அவர் தனியாக வந்ததை அறிந்த மருத்துவர்கள், உறவினர்களுடன் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வேல்முருகன், சிகிச்சை பெற முடியாமல் அவசர சிகிச்சை பிரிவுக்கு எதிரே உள்ள வராண்டாவில் வாடிய முகத்துடன் படுத்திருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற வந்தவரை உள்நோயாளியாக அனுமதிக்காத மருத்துவர்களின் செயல் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது…