மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க கோரி கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வறட்சி காரணமாக கரும்பு உற்பத்தி குறைந்ததால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால் மீண்டும் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்காத நிலையில் கரும்பு விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கரும்பை கையில் ஏந்தியபடி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.