கோவையில் உடலில் பலத்த காயங்களுடன் பிடிபட்ட சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கோவை மாவட்டம் வடவள்ளி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதை தொடர்ந்து சிசிடிவி உதவியுடன் சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்த வனத்துறையினர், நீண்ட போராட்டத்திற்கு பின் சிறுத்தையை வலை வைத்து பிடித்தனர்.
சிறுத்தையை பரிசோதித்தபோது உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. சிறுத்தையின் உடலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படும் நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுத்தை உயிரிழந்தது.