கோவையில் வெறிநாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த வடமாநில இளைஞர் நாய் போல் குரைத்துக் கொண்டே தற்கொலை செய்து கொண்டார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர். இவர், கோவையில் தங்கி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை வெறிநாய் கடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கண்ணாடியை உடைத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டு ராம் சந்தர் தற்கொலை செய்து கொண்டார்.
நிகழ்விடத்திற்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.