சபரிமலை கோயிலில் பக்தர்கள் வசதிக்காக தரிசன வழி மாற்றப்பட்டுள்ளது.
அந்த வகையில், பங்குனி மாத பூஜையின் போது பக்தர்கள் 18ம் படி ஏறி கொடி மரத்தில் இருந்து நேராக கோயிலில் நுழைந்து சுவாமி தரிசனம் செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்தார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 14ம் தேதி பங்குனி மாத பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது. அதன் பின்னர் 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை தினமும் பூஜைகள் நடைபெறும்.