உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஜெலன்ஸ்கி ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் போர் நிறுத்தம் மிகவும் முக்கியமானது என்றும், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா விரும்புவதாகவும் தெரிவித்தார்.
30 நாள் இடைக்கால போர் நிறுத்தத்தை ஏற்க உக்ரைன் தயாராக உள்ளதாக அவர் கூறினார். ரஷ்யாவும் போர் நிறுத்தத்தை ஒப்புக்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், உக்ரைன் – ரஷ்யா போரால் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் வேதனை தெரிவித்தார்.