மெட்ரோ ரயில் நிலையத்துக்காக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள பழமையான ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயில் ராஜ கோபுரத்தை இடிப்பதற்கு எதிராக பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், மெட்ரோ ரயில் நிலைய நுழைவு மற்றும் வெளியேறும் பாதை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன வளாகத்தில் மாற்றப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது.
இதனை ஏற்று கொண்ட உயர்நீதிமன்றம், ஆலயம் காப்போம் கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், 837 சதுர மீட்டர் பரப்பு நிலத்தை கையகப்படுத்தும் நோட்டீசுக்கு எதிராக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.