சென்னை அருகே சாலையோரத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரால் பாதசாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
சென்னை மேடவாக்கம்-மாம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள வெங்கைவாசல் பகுதியில் டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் மதுப் பிரியர்கள் சாலையோரத்தில் நின்றபடி மது அருந்துவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவ்வழியாக நடந்து செல்ல பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனர். இதுதொடர்பாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.