ஆந்திரா அருகே ஜவுளிக்கடை வியாபாரியில் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.
ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ள லட்சுமி சினிமா தியேட்டர் அருகே ஜவுளிக்கடை உரிமையாளர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அதிகாலை வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் சிறிதும் அஞ்சாமல் கொள்ளையர்களை பிடித்து சரமாரியாக தாக்கினர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொள்ளையர்களிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
பின்னர், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கொள்ளையர்களை பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.