கண்ணிவெடி தாக்குதலில் இருந்து ராணுவ வீரர்கள் தப்பிக்க நெல்லை பள்ளி மாணவர் ஸ்மார்ட் ஷூவை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
பாளையங்கோட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருபவர் சாலமன் டேவிட். இவர் போரில் சுமார் 3 மீட்டர் தூரத்தில் உள்ள கண்ணிவெடிகளை சென்சார் உதவியுடன் கண்டறியும் ஸ்மார்ட் ஷுவை வடிவமைத்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற கண்டுபிடிப்புக்கான போட்டியில் டேவிட்டின் ஸ்மார்ட் ஷூவுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. இந்நிலையில், நெல்லை சரக டிஐஜி மூர்த்தி டேவிட்டை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.