கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு பகுதியில் வளர்ப்பு யானையை சாலையில் நிறுத்திய பாகன் அதன் மீது மதுபோதையில் படுத்து உறங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
திற்பரப்பு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டில் அனுபமா என்ற யானையை வளர்த்து வருகிறார். இந்த யானையை பராமரிக்க 2 பாகன்கள் உள்ள நிலையில் ஒருவர் யானைக்கு ஓலைகளை வெட்டுவதற்காக வெளியே சென்றுவிட்டார். மற்றொரு பாகன் மதுபோதையில் யானையின் மீது படுத்து உறங்கியுள்ளார்.
இதனால் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்த யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். ஒரு வழியாக சாலை ஓரம் நின்ற யானை குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை மீட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.