கரூரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் மாசித் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தான்தோன்றி மலையில் அமைந்துள்ள இக்கோயிலில் கடந்த 4-ஆம் தேதி மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஒவ்வொரு நாட்களும் சுவாமிக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் பக்தர்கள் முன்னிலையில் மேளதாளம் முழங்க நடத்தப்பட்டது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் தேரில் எழுந்தருளினார்.
அப்போது கோவிந்தா கோஷத்துடன் வழிபட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.