மாசித்திருவிழாவை ஒட்டி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
கும்பகோணத்தில் கடந்த 3-ம் தேதி மாசித்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாசி மகத்தை ஒட்டி மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
இதனை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடியும், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் வழிபட்டனர். மகாமக குளத்தில் புனித நீராடும் பக்தர்கள் கும்பகோணம் நகரில் உள்ள சிவாலயங்களில் வழிபாடு நடத்தினர்.