தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே பட்டா நிலத்தில் இருந்த மரங்களை வனத்துறையினர் வெட்டியதாக பாதிக்கப்பட்டவர் குற்றம்சாட்டினார்.
கோடாலியூத்து கிராமத்தை சேர்ந்த முத்துபெருமாள் என்பவர் அவருக்கு சொந்தமான இடத்தில் இலவம், மா, பலா, முந்திரி உள்ளிட்ட மரங்களை விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் 50-க்கும் மேற்பட்ட இலவம் மரங்களை வருஷநாடு வனத்துறையினர் வெட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த முத்துப்பெருமாள் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்