மும்மொழிக் கொள்கையை அறிவுள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, அமைச்சரின் மகன் மும்மொழி படிக்கிறார் என்றால் அவருக்கு அறிவில்லை என்றுதான் அர்த்தம் எனக் கூறியுள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசியவர்,
தமிழகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 3 மொழிகள் கற்பிக்கப்படுகிறது என்றும் தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிலும் 14.5 லட்சம் மாணவர்கள் மும்மொழி கற்கின்றனர் என அண்ணாமலை கூறினார்.
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை, அமைச்சர் பிடிஆரின் மகன் 3 மொழிகள் கற்பிக்கும் பள்ளியில் படிக்கிறார் என்றும் பிடிஆரின் மகன் இந்தியக் குடிமகனா? அமெரிக்க குடிமகனா? என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
“கோபாலபுரத்து மாடல் இருமொழிக் கொள்கை வெற்றி பெறுமா? இந்திய மாடல் மும்மொழிக் கொள்கை வெற்றி பெறுமா என பார்ப்போம் என அண்ணாமலை தெரிவித்தார்