தமிழகத்தில் உள்ள மதுபான ஆலைகளில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
டெல்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழகத்திலும் மதுபானக் கொள்கை முறைகேடு ஆரம்பமாகியுள்ளது என்றும் மதுபான ஆலைகளில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
மதுபான ஊழல் மூலமாக ரூ.1000 கோடி திமுகவிற்கு சென்றுள்ளது, திமுக தேர்தல் செலவுக்காக இந்த பெருந்தொகை பயன்படுத்தப்படுகிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
டாஸ்மாக் நிறுவனமும், மதுபான ஆலைகளும் இணைந்து தமிழ்நாடு மதுபானக் கொள்கையை நிர்ணயிக்கின்றனர் என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.