தேனி மாவட்டம் உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருக்காளத்தீஸ்வரர் கோயில் மாசி திருவிழா 5 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஒன்றாம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேலும் மஞ்சள் நிறப்பட்டு உடுத்தி திருக்காளத்தீஸ்வரர் உடன் திருத்தேரில் எழுந்தருளிய ஞானாம்பிகை பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.