சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவண்ணக் கவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட கிடையூர் மேட்டூர் பகுதியில் காலை நேரத்திலேயே ஒருவர் மது விற்பனை செய்துள்ளார். இதையறிந்த அப்பகுதி பெண்கள் அவரை பிடிக்க முற்பட்ட போது மது பாட்டில்களை கீழே போட்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.
தொடர்ந்து அந்த மது பாட்டில்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.