மொரீஷியஸ் தேசிய தின விழாவில் இந்திய கடற்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.
இதை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதேபோல, மொரீஷியஸ் தேசிய தின விழாவில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரும் பங்கேற்றது.
ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்பின் நுழைவு வாயிலாக மொரீஷியஸ் விளங்குவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.